'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' : சோயிப் அக்தரின் வாழ்க்கை, சினிமா ஆகிறது..

By 
rawal

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். 

இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 46 டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 178, 247 மற்றும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

சிறந்த பந்து வீச்சு :

இவரின் விக்கெட் வீழ்த்தும் திறனை விட இவர் வீசும் பந்தின் வேகத்தை கண்டு முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூட அஞ்சி உள்ளனர். 

குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 161 கிலோ.மீ வேகத்தில் அக்தர் வீசிய பந்து தான் தற்போது வரை கிரிக்கெட்-யில் வீசப்பட்ட வேகமான பந்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டைரக்டர் :

இந்நிலையில் தற்போது இவரின் வாழ்கை வரலாறு "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை முஹம்மது ஃபராஸ் கெய்சர் என்பவர் இயக்குகிறார். 

சோயிப் அக்தர் பாகிஸ்தானின் ராவல்பிண்டி என்ற இடத்தில் பிறந்ததாளும், அதிவேகமாக பந்துவீசியதாலும் இவருக்கு ஏற்கனவே "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரால் அறியப்பட்டவர். 

இந்த நிலையில் அதே பெயரில் இவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது.
*

Share this story