மீடியாக்கள் மீது ரோகித் சர்மா பயங்கர கோபம்; ஏன் தெரியுமா?

riti

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மோசமான காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு நடைபெற்ற இந்த விபத்தினை அடுத்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அதோடு ரிஷப் பண்டின் மெடிக்கல் ரிப்போர்ட், போலீஸ் அறிக்கை மற்றும் பிசிசிஐ-யின் தகவல் என பல்வேறு விஷயங்கள் ரிஷப் பண்ட் குறித்து சமூக வலைதளத்தில் அவர் குறித்த செய்திகளே அதிகஅளவு பகிரப்பட்டன. அதேபோன்று அவர் விபத்தினை சந்தித்த அந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் என பல்வேறு விஷயங்கள் நேற்று சமூக வலைதளத்தில் அதிகஅளவு பகிரப்பட்டு இருந்தது.

அதோடு ரிஷப பண்ட் விரைவில் குணமடைந்து இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களது பிரார்த்தனைகளையும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்த அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :

'ஒருவர் அடிபட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில், அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது மிகவும் தவறான விஷயம். இதுபோன்று சிலர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

ஏனெனில் ரிஷப் பண்டின் குடும்பத்தாரோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ அவரது இந்த நிலை குறித்து வருத்தப்படும் வேளையில், இது போன்ற சில விஷயங்களை பார்த்தால் அவர்கள் மனதளவில் எவ்வளவு காயப்படுவார்கள் என்று யோசிக்க வேண்டும். உணர்வின்மையுடன் சில மீடியாக்கள் செயல்படுகின்றன.

Share this story