எனது மரணம் குறித்த வதந்தி பரவியது : ஜடேஜா தகவல்

jadeja

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆங்காங்கை இன்று எதிர் கொள்கிறது. இந்த போட்டிக்காக ஜடேஜா நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை அணியை இழக்க கூடும் என்று செய்திகள் பரவி வருவது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது:-

உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும். ஒரு முறை எனது மரணம் குறித்த வதந்தி பரவியது.

இதை பற்றி எல்லாம் நான் அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது. இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

Share this story