டி20 ஆட்டத்தில் இருந்து, சஞ்சு சாம்சன் விலகல் : பிசிசிஐ அறிவிப்பு

By 
sanju

* இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.

* பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷகீல் 124 ரன்களுடனும், அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 3 விக்கெட், இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 


 

Share this story