செம ரன்ஸ் : அந்த வீராங்கனையை முறியடித்தார், நம்ம ரோகித் சர்மா..

rohit33

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள் சேர்த்தார். 35 வயதான ரோகித் சர்மா, ஆடவர் கிரிக்கெட்டில் அதிக டி20 கிரிக்கெட்டில் விளையாடி, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்திருந்தார்.

ஆட்டத்தின்போது, டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் இதுவரை 131 டி20 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

ஆட்டத்தில் ரோகித் 12 ரன்களை கடந்தபோது, பேட்ஸின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார்.

Share this story