உம்ரான் மாலிக்கை தேர்வு செய்திருக்கக் கூடாது : முன்னாள் வீரர் மதன்லால் காட்டம்
 

By 
malik

உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :

வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்பாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

டெஸ்ட் போட்டிதான் அவரைப் போன்ற பவுலரை உறுதியானவராக மாற்றக்கூடிய கிரிக்கெட். அவர் நல்ல பவுலர் ஆனாலும் அவரை இன்னும் நல்ல பவுலராக நீங்கள் உருவாக்க வேண்டும். 

அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளித்து தொடர்ச்சியாக 10-15 ஓவர்கள் வீச வைத்தால் தான் விக்கெட்டுகள் எடுப்பது எப்படி என்பதை புரிய வைக்க முடியும். 

ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவரை சரமாரியாக அடிக்க பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர். ஏனெனில் அவரின் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு ஏற்றவாறு வருகிறது. 

நான் ஏற்கனவே கூறியது போல் விக்கெட்டுக்கள் எடுக்காமல் பந்தை ஸ்விங் செய்யாமல் வேகத்தை மட்டும் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. 

தற்போது கொஞ்சமும் அனுபவமற்றவராக இருக்கும் அவருக்கு தேவையான அனைத்து அனுபவமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும். 

நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக அவரை டி20 அணியில் சேர்த்திருக்க மாட்டேன்' என்றார்.
*

Share this story