எங்கள் வெற்றிக்கு பனித்துளியும் ஒரு காரணம் : மயங்க் அகர்வால் 

By 
mayang1

நடப்பு ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் 206 ரன்கள் இலக்கை எடுத்து பெங்களூர் அணியை வென்றது.

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியதாவது :

வெற்றிக்கான 2 புள்ளிகள் மிகவும் முக்கியமானது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. 

நாங்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம்.

பனித்துளி காரணமாக, 2-வது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பெங்களூர் அணிக்கு கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை கொடுத்து விட்டோம். எங்கள் வீரர்கள் திறமையை சரியான முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்' என்றார்.

பஞ்சாப் அணி 2-வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்சை ஏப்ரல்1-ந் தேதியும், பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் நாளை 30-ந் தேதி கொல்கத்தாவையும் எதிர்கொள்கிறது.

Share this story