மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி : முதல் பரிசை வென்றது சென்னை அணி..

kabaddi1

திருவாரூர் மாவட்டம், வடுவூர் அடுத்துள்ள கட்டக்குடியில், மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி  நடைபெற்றது. 

இதில் திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 அணிகள் கலந்துகொண்டன. 

2 நாட்கள் நடந்த இந்த போட்டியில், சென்னை சிட்டி போலீஸ் அணி முதல் பரிசு பெற்றது. இந்த அணிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 

2-ம் இடம் பெற்ற ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணிக்கு ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையும், கோப்பையையும் வழங்கப்பட்டது. 

3-ம் இடத்தை கட்டக்குடி விளையாட்டுக்கழக அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. 

வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் பொன்கோவிந்தராஜ், நிர்வாகிகள் ரவி, அசோகன் உள்பட பலர் பரிசுகளை வழங்கினர்.

Share this story