81 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி :  சென்னையில், இன்று தொடங்குகிறது.. 

valleyball1

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70- வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. லீக் மற்றும் நாக்- அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உள்பட 32 அணிகளும்,

பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்.(கோபி) எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம்., ஐ.சி.எப். தமிழ்நாடு தபால் துறை பாரதியார் (ஆத்தூர்) செயின்ட் மேரிஸ், ராணி மேரி கல்லூரி உள்பட 49 அணிகளும் பங்கேற்கின்றன.

இன்று நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Share this story