கிரிக்கெட் 'கெத்து' புதிய சாதனை படைத்தனர் சுப்மான் கில், ருதுராஜ்..
 

By 
shub

* விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story