சூப்பர் டிவிஷன் ஹாக்கி; சென்னை அணி வெற்றி-மேலும் இன்றைய ஆடுகளம்..
 

chennai2

ஸ்ரீராம் சிட்டி-சென்னை ஹாக்கி சங்க சூப்பர் டிவிசன் லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. 

ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர். ஸ்டேட் வங்கி அணியில் எழில் அரசன் கோல் அடித்தார். 

மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது. 

துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர். 

இன்றைய ஆட்டங்களில் சாய்-எஸ்.டி.ஏ.டி , ஐ. சி. எப்.-தெற்கு ரயில்வே அணிகள் மோதுகின்றன.
*

Share this story