டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு
 

rahul10

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 

கே.எல்.ராகுல் :

இங்கிலாந்து தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. 

அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கே.எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

இந்திய அணி :

ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்ட்யா, ஜடேஜா, 

அக்சர் படேல், அஷ்வின், ஆர் பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆவர்.
*

Share this story