டி20 கிரிக்கெட் டுடே : தோல்வியடைந்தது மிக வருத்தமாய் இருக்கிறது : ரோகித் வேதனை 

By 
feel

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர்.

இந்தியாவின் பவுலிங் சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர். இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையுடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன. அதனை இங்கிலாந்து ஓப்பனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஸ்கொயர் திசைகளில் தான் ரன் கசியும் என அறிவோம்.

ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என நினைத்தேன். ஆனால் நினைத்த பகுதியில் ஸ்விங் ஆகவில்லை. வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் தான் ஆடினோம்.

அப்போட்டியில் வேறும் மாதிரி இருந்தது. திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் நாங்கள் அனைத்து திட்டங்களையும் சரியாக செய்தோம். 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும்.

எனினும் திட்டங்களை தொடர்ந்து செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story