டி20 கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்துமா, இன்று இந்திய அணி; ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

t2023

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. 

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

 2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது. முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
 

Share this story