டி20 கிரிக்கெட் : இந்திய அணியின் அதிரடி இன்றும் தொடருமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 

By 
t204

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று வெள்ளிக்கிழமை நடக்கிறது. 

இதையொட்டி, இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் இரு ஆட்டங்களில் சொதப்பிய இந்தியா 3-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்து வீச்சும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது. 

இருப்பினும், இளம் கேப்டன் ரிஷப் பண்டுவின் (29, 5, 6 ரன்) பொறுப்பற்ற பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. 

இன்றைய ஆட்டத்தில், அவர் அதிரடி காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 

தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ள இந்திய அணி அதற்கான வியூகங்களை வகுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி, தொடக்க ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை சர்வசாதாரணமாக விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. அதில் டேவிட் மில்லர், வான்டெர் டஸன் ரன் மழை பொழிந்தனர். 

கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஹென்ரிச் கிளாசெனின் சரவெடி பேட்டிங்கால் (81 ரன்) 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆனால், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் 131 ரன்னில் சுருட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story