டி20 உலகக்கோப்பை போட்டி : இந்திய அணி வீரர்கள் தேர்வு..
 
icc

டி 20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 

இதுவரை 7 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அதிக பட்சமாக 2 முறை (2012, 2016) சாம்பியன் பட்டம் பெற்றது. 

இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா ஒருமுறை டி 20 உலக கோப்பையை வென்றுள்ளன. 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 

இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ம் தேதி மோதுகிறது. 27 மற்றும் நவம்பர் 6-ம் தகுதி சுற்று அணிகளுடனும், அக்டோபர் 30-ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுடனும், நவம்பர் 2-ம் தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது. 

டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் செப்டம்பர் 15-ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார்கள். 

16-ம் தேதிக்குள் அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விடுத்துள்ளது. 

ஒவ்வொரு அணியில் 15 வீரர்கள் உள்பட 23 பேரை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வீரர்களில் இருந்து தான் போட்டியில் பங்கேற்க இயலும். மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வீரர்களை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவுக்கு இருக்கிறது.

ஆசிய கோப்பை போட்டிடி 20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை 7 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அதிக பட்சமாக 2 முறை (2012, 2016) சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா ஒருமுறை டி 20 உலக கோப்பையை வென்றுள்ளன. 

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 

டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 

இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ம் தேதி மோதுகிறது. 27 மற்றும் நவம்பர் 6-ம் தகுதி சுற்று அணிகளுடனும், அக்டோபர் 30-ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுடனும், நவம்பர் 2-ம் தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது.

டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் செப்டம்பர் 15-ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார்கள். 

16-ம் தேதிக்குள் அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விடுத்துள்ளது. 

ஒவ்வொரு அணியில் 15 வீரர்கள் உள்பட 23 பேரை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வீரர்களில் இருந்து தான் போட்டியில் பங்கேற்க இயலும். 

மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வீரர்களை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவுக்கு இருக்கிறது. 

ஆசிய கோப்பை போட்டி முடிந்து 4 தினங்களில் இந்த தேர்வு இருக்கிறது. 

ஆசிய கோப்பைப் போட்டியின் அடிப்படையில் உலக கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும்.
*

Share this story