டி20 உலகக்கோப்பை போட்டி: அயர்லாந்து அபார வெற்றி; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்..

t20c2

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

முன்னாள் சாம்பியனான அவர் சிங்கப்பூரின் லோ கீன்யூலிடம் 13-21, 15-21 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-9, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரணாய்யை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அயர்லாந்து அணி 17.3 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இதில், பேட்டிங் செய்த ஆண்டி பால்பிர்னிய் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர், லார்கன் டக்கர் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அயர்லாந்து அணி வீழ்த்தியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

Share this story