டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு..

t20worldcub

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான, முதல் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை, தென் ஆப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் தொடரில், 41 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று, சூப்பர் 6, அரையிறுதி என மூன்று சுற்றுகளாக உலகக்கோப்பை நடைபெறுகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம், பெனோனி ஆகிய இரு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன.

குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகளுடன் குரூப் சுற்றில் மோதுகின்றன.

Share this story