ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் : முகமது ஷமி திடீர் விலகல்

shami

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
 

Share this story