டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்; பும்ராவுக்கு பதில் வேறொரு வீரர் சேர்ப்பு : பிசிசிஐ அறிவிப்பு

pumrah

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது.

நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this story