டிஎன்பிஎல் கிரிக்கெட் : இன்றைய ஆட்டத்தில், பிளே ஆப் சுற்றுக்குள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.?

tnpl

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. 

சேலத்தில் இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 

கவுசிக்காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. 

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும். 

இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது. 

அந்த அணியில் ஜெகதீசன், சசிதேவ், ராதா கிருஷ்ணன், ஹரீஷ்குமார், சாய்கிஷோர், சித்தார்த், அலெக்சாண்டர்,. சந்தீப் வாரியர் ஆகிய வீரர்கள் உள்ளனர். 

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4 வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. 

அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. 

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க திருப்பூர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். 

அந்த அணியில் அரவிந்த், சுப்பிரமணியன், ஆனந்த், மான்பாப்னா, எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், ராஜ்குமார், மணிகண்டன், மோகன் பிரசாத் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
*

Share this story