டிஎன்பிஎல் கிரிக்கெட் : நெல்லை-மதுரை அணிகள் இன்று மோதல்..
 

tnpl5

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந்தேதி நெல்லையில் தொடங்கியது. 

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் , மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 

2-வது வெற்றி :

நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் அணி 2-வது வெற்றியை பெற்றது. 

திருப்பூர் அணி முதல் தோல்வியை தழுவியது. திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

4-வது வெற்றி ஆர்வம் :

மதுரை அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ்) வெற்றி பெற்று இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது. 

நெல்லை அணி தான் மோதிய 3 போட்டிகளிலும (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்) வெற்றி பெற்றது. 4-வது வெற்றி ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. 
*

Share this story