டிஎன்பிஎல் கிரிக்கெட் : சேலம்-திருச்சி அணிகள் இன்று மோதல்..
 

salem

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடந்த 23-வது ஆட்டத்தில், திருப்பூர் தமிழன்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது. 

இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், நெல்லை ராயல் கிங்ஸ் 12 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் தலா 8 புள்ளிகளும், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் தலா 6 புள்ளிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளியும் பெற்றுள்ளன. சேலம் அணி புள்ளி எதுவும் பெறாமல் உள்ளது. 

இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன. 

இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சேலம் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றுள்ளது. 

இதனால், இன்றாவது முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படு கிறது. திருச்சி அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
*

Share this story