டிஎன்பிஎல் கிரிக்கெட் : சேலம் அணியை வீழ்த்தியது திருப்பூர்; ஆடுகள விவரம்..

By 
tnpl

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. 

டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். 

அத்துடன், டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். 

கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. 

அந்த அணியின் தொடக்க வீரர் கோபிநாத் 5 ரன்னுடன் வெளியேறினார். கவின் 14 ரன்னும்,கணேஷ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதிகபட்சமாக ரவி கார்த்திகேயன் 36 ரன்கள் அடித்தார். சேலம் அணி 19.2 ஓவர் முடிவில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதனையடுத்து திருப்பூர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருப்பூர் அணி சார்பில் அதிபட்சமாக மோகன் பிரசாத் 3 விக்கெட்களும், முகமது அரவிந்த் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். 
*

Share this story