டிஎன்பிஎல் ஆட்டம் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி வெற்றி.. ஆடுகள விவரம்..

By 
seppak

6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. 

நேற்று இரவு நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார். 

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து, களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக, நாராயணன் ஜெகதீசன் 51 பந்துகளில் 75 ரன்களை அடித்தார். மற்றொரு வீரர் சாய் கிஷோர் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
*

Share this story