டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்றுடன் நிறைவு : களத்தில், திண்டுக்கல்-சேலம் அணிகள் மோதல்..
 

tnpl2

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. 

அதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றது. தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 5 ரன்னில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்து 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே முன்னேறி இருந்தன. இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகிறது. 

இரண்டு ஆட்டங்கள் இன்று நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டி மதுரை பாந்தர்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு உரியது.

இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட திண்டுக்கல் அணி 3-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. 

6 ஆட்டத்திலும் தோல்வி அடைந்த சேலம் அணி தனது கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story