விக்கெட் எடுப்பதுதான் முக்கியம் : கேப்டன் கே.எல்.ராகுல்

rahul19

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், 'ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். 

இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. 

ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது. 

நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும்.

நான் களத்தில் இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும் அவர் கூறினார். 

நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
*

Share this story