தமிழ், தெலுங்கு, மலையாளம் : சினிமாவில் களம் இறங்குகிறார் எம்.எஸ்.டோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். தோனி இப்போது டோனி புரொடக்சஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'டோனி எண்டர்டெயின்மென்ட்' என்று பெயரிட்டுள்ளார். ஏற்கெனவே அவரது தயாரிப்பில் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2013 சூதாட்ட ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு ஐபிஎல் 2018 பதிப்பிற்குத் திரும்பியதை அடிப்படையாகக் கொண்டு ரோர் ஆப்தி லையன் என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப்படமும், புராணத்தை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் டோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதைத் தெடர்ந்து பாலிவுட் மட்டுமல்லாமல் பல தென்னிந்தியத் திரைப்படங்களை 'தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.