டென்னிஸ் தர்பார் : தொடர்ச்சியாக 36-வது முறையும் கலக்கலான வெற்றி : ஸ்வியாடெக் 'கெத்து'

By 
awi

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 

போட்டியின் 2-வது நாளும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. 

36-வது வெற்றி :

பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-0, 6-3 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீராங்கனை ஜானா பெட்டை (குரோஷியா) பந்தாடினார். ஸ்வியாடெக் தொடர்ச்சியாக பெற்ற 36-வது வெற்றி இதுவாகும். 

இதன் மூலம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். 

ஸ்வியாடெக் 2-வது சுற்றில் பட்டினாமா கெர்கோவை (நெதர்லாந்து) எதிர்கொள்கிறார். 

மற்ற ஆட்டங்கள் :

மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி (கிரீஸ்) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஜோ ஹைவ்சை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார். 

இதேபோல் பாலா படோசா (ஸ்பெயின்) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் லோசா சிரிகோவை (அமெரிக்கா) விரட்டியடித்தார். சிமோனா ஹாலெப் (ருமேனியா), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் தடையை கடந்தனர். 

அதே சமயம் சீனாவின் கியாங் வாங் 6-4, 5-7, 6-2 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார். 
*

Share this story