டென்னிஸ் தர்பாரில் செம போட்டி : இறுதியில், சாம்பியன் பட்டம் வென்றது யார் தெரியுமா?

sabalen

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

* சானியா தொடர்ந்து பேசுகையில், நான் அழுகிறேன் என்றால் இது ஆனந்த கண்ணீர். எனது தொழில்முறை டென்னிஸ் பயணத்தை மெல்போர்ன் மைதானத்தில் 2005-ம் ஆண்டில் தொடங்கினேன். அப்போது நான் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்சை (அமெரிக்கா) சந்தித்தேன்.

அதன் பிறகு இங்கு பல போட்டிகளில் பங்கேற்றதுடன் பட்டங்களும் வென்று இருக்கிறேன். மெல்போர்ன் மைதானம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது கடைசி ஆட்டத்தை முடித்துக்கொள்ள இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.

கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணா எனது முதலாவது கூட்டாளி ஆவார். எனக்கு 14 வயது இருக்கையில் நாங்கள் இணைந்து தேசிய போட்டியில் பட்டத்தை வென்றோம். அவர் எனது சிறந்த நண்பர் மட்டுமின்றி சிறந்த இணை ஆட்டக்காரரும் ஆவார்.

கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் எனது குழந்தைக்கு முன்னால் விளையாட முடியும் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை' என்றார். 

Share this story