டென்னிஸ் டுடே : பதக்கம் வெல்கிறார் இந்திய வீராங்கனை பவினா..
 

By 
pavina

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது. 

இந்நிலையில், 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். 

அந்த வகையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சூ பெய்லியை இன்று எதிர்கொண்டார். 

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

முன்னதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story