டென்னிஸ் டுடே : கலங்கினார் சானியா மிர்சா; அசத்தினார் டி மினார்..

sania4

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரை சானியா மிர்சா தோல்வியுடன் நிறைவு செய்தார். அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி-மினார் முன்னேறி உள்ளார். ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.

இந்த வெற்றி மூலம் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற டி-மினார், நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். 

Share this story