டென்னிஸ் போட்டி : ரபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..
 

rafeal

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், இத்தாலி வீரர் சொனேகோவுடன் மோதினார். 

இதில் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு சுற்றில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் கிர்கியோசுடன் மோதினார். 

இதில் 6-7, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ். இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் இருந்து சிட்சிபாஸ் வெளியேறினார்.
*

Share this story