டென்னிஸ் களம்  : இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அரபு வீராங்கனை..

ons

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபர், ரஷியாவின் எகாடெரினா அலெக்சான்ட்ரோவாவுடன் மோதினார்.

61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒன்ஸ் ஜாபர் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அலெக்சான்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ 1000 (WTA 1000) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அரபு வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

இந்த ஆண்டில் 2-வது முறையாக ஜபீர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற செர்லஸ்டான் ஓபனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 

மேலும், தனது கேரியரில் ஜபீர் சந்திக்க உள்ள 6-வது இறுதிப்போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story