டெஸ்ட் மேட்ச் : வங்காளமா? வெஸ்ட் இண்டீசா? ஆடுகள விவரம்..
 

By 
test

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் , 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் தொடங்கியது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

தத்தளிப்பு :

முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கியது. 

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார் , 

இறுதியில், வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டும், ரோச், கைல் மேயர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பிராத்வெயிட் :

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார். 

முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 42 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
*

Share this story