டெஸ்ட் மேட்ச் டுடே : முதல் இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் 265 ரன்களுக்கு ஆல்அவுட்

west2

வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது. 

கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். பிளாக்வுட் 63 ரன்கள் எடுத்தார். 

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
*

Share this story