பாகிஸ்தானுக்கு, 'இவர்தான்' ஆபத்தான பேட்ஸ்மேனாக இருப்பார் : வாசிம் அக்ரம் கணிப்பு

wasim

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 27-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது.

செப்டம்பர் 11-ந் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்வு பெறும் ஒரு அணி என 6 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 ஆட்டம் இம்மாதம் 28ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவ் இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். அவர் தனித்துவமானவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது ஆட்டத்தை பார்த்தேன்.

அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது. அவர் அடித்த ஒரு ஷாட்டில் பேட்டின் நடுவில் இருந்து ஃபைன் லெக்கை நோக்கி பந்து பறந்து சென்றது அசாதாரணமானது. அந்த ஷாட் அடிப்பது கடினம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this story