விராட்கோலி மீண்டு வர, வெங்சர்க்கார் கூறிய அறிவுரை டிப்ஸ்..
 

By 
sarkar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார், விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலியா மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால், கோலி போன்ற முக்கியமான வீரர்கள் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம். 

எந்த அளவிற்கு அதிக போட்டிகளில் அவர்களைப்போன்ற வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவருக்கு தன்னம்பிக்கையும், பார்மும் திரும்ப கிடைக்கும். 

எனவே, என்னை பொறுத்தவரை விராட் கோலி தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். 

ஆனால், அவரை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு. 

எப்போதுமே ஒரு வீரர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அதிக போட்டிகளை வழங்க வேண்டும். 

ஏனெனில், அதிக போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் மைதானத்தில் நின்று விளையாட முயற்சிப்பார்கள். 

மீண்டும் அவர்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும் அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திரும்ப கிடைக்கும். விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட் ஆகி வருகிறார். 

2003-2004 ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கர் இதே மாதிரி வெளியேறினார். 

எனவே, அந்த திசையில் ரன் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்த சச்சின் அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் விளையாடாமல் 241 ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பினார். விராட் கோலிக்கும் அதேபோல் செய்யும் திறன் உள்ளது. 

எனவே, அவர் அந்த பகுதியில் கடினமாக உழைத்து திறம்பட விளையாட வேண்டும்' என்றார்.
*

Share this story