லக்னோ நிர்வாகத்திற்கு, நன்றியுள்ளவனாக இருப்பேன் : இளம் வீரர் பதோனி

நடப்பு ஐபிஎல் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இளம் வீரர் பதோனி.
இவர், லக்னோ அணியில் தேர்வானது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியதாவது :
காம்பீர் எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது இயல்பான விளையாட்டை விளையாடுமாறும் நீங்கள் நல்ல ஸ்கோரை எடுப்பீர்கள் எனவும் ஊக்கம் அளித்தார்.
மேலும், அவர் என்னிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டியதில்லை. அதற்கு மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால், உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறும் கூறினார்'
நான் இரண்டு முதல் மூன்று அணிகளுக்கான சோதனைகளுக்குச் சென்றுள்ளேன், ஆனால், இறுதியில் யாரும் என்னை (3 ஆண்டுகளாக) ஏலத்தில் எடுக்கவில்லை.
எனவே, என்னை (தொடக்க விலை 20 லட்சத்திற்கு) ஏலம் எடுத்ததற்காக லக்னோவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
கடந்த மூன்று வருடங்கள் போராட்டமாகத்தான் இருந்தது. டெல்லி அணியிலும் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சீசனில் மட்டுமே விளையாடி, ஒரே ஒரு முறை பேட்டிங் செய்தேன். எனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளேன்.
நான் அதிக ஷாட்களை பழகி ஆடி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியது' என்றார்.