இன்று, கடைசி ஒரு நாள் போட்டி : தொடரை வெல்லுமா இந்திய அணி..
 

By 
fcm

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இலங்கை அணி ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் சதத்தோடு 373 ரன் குவித்து மிரட்டிய இந்தியா 2-வது ஆட்டத்தில் 216 இலக்கை தடுமாறித் தான் எட்டிப்பிடித்தது. மிடில் வரிசையில் லோகேஷ் ராகுல் (64 ரன்) பொறுப்புடன் விளையாடி அணியை கரைசேர்த்தார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் விளாசல் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி, அக்ஷர் பட்டேலுக்கு ஓய்வு அளித்து விட்டு அர்ஷ்தீப்சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இன்னும் 3 நாட்களில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. அந்த தொடருக்கு வெற்றியோடு நுழைய இந்தியா ஆர்வமாக உள்ளது.
 

Share this story