இன்றைய டி20 போட்டி : தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி..

match2

* இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டி தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
* கார் விபத்தில், படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
 

Share this story