இன்றைய ஆட்டம், பேட்டிங்கா? பவுலிங்கா? யோசனையில் ரோகித் : வைரலாகும் நிகழ்வு..

bating

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் நியூசிலாந்து இந்தியாவின் அபார ப்ந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணியை பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னெர் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா?, பீல்டிங் தேர்வு செய்யவா? என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Share this story