தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டி : கே.எல்.ராகுல், குல்தீப் திடீர் விலகல்

By 
rahul7

இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. 

இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர். 

இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அதேசமயம் காயமடைந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
*

Share this story