இரவு பார்ட்டியில், மனைவி சாக்சியுடன் டோனி குத்தாட்டம் : வைரல் நிகழ்வு..

saksi

டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் டோனி பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா, டோனி மனைவி சாக்சி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் தெரிந்தது.

மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, இணைந்து நடனமாடுவதும் அந்த வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை அவரது மனைவி சாக்சி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ மூலம் தெரிய முடிகிறது.

நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, டோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா மட்டுமில்லாமல், அவரின் சகோதரர் குர்ணால் பாண்ட்யா, இஷான் கிஷன் போன்றோரும் பார்ட்டியில் கலந்துகொண்டனர்.

Share this story