ரசிகரின் டி-ஷர்ட்டில் கையெழுத்திடுகிறார் டோனி : வைரல் நிகழ்வு 

sign

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனுக்கான ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

தற்போது அவர் ஐபிஎல் மட்டுமே ஆடி வருகிறார். மற்ற நேரங்களில் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்து தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாலும் ஏராளமாக உள்ளனர்.

இன்னமும் அவர் ஐபிஎல்லில் களத்தில் இறங்கும்போது அவரது ரசிகர்கள் டோனி...டோனி ...டோனி என்ற சத்தம் எழுப்புவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உள்ளது. அவருக்கு ரசிகர் பட்டாளம் இன்னமும் ஏராளமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த சீசன் ஐபிஎல்லுக்கு பின்னர் டோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஓய்வு நேரங்களில் டோனியின் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வரும். சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் துபாயில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பாண்ட்யாவுடன் இணைந்து டோனி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

அதேபோல், தற்போது டோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகரின் முதுகில் (டி-ஷர்ட் பின்புறம்) டோனி ஆட்டோகிராப் போடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story