'உபேர் கோப்பை' பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி..

By 
sindhu feel1

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. 

இந்த போட்டியில், பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. 

இதில், பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. 

இந்த ஆட்டத்தில், ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவை எளிதில் தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றதுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது. முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை வென்று இருந்தது.

பி.வி.சிந்து அதிர்ச்சி :
 
இந்நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய பி.வி. சிந்து ஆன் சீ யங்கிடம் 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 

அதன்பின் ஆடிய ஸ்ருதி மிஸ்ரா சிம்ரான் சிங்கி ஜோடி ஜீ ஜோஹி மற்றும் ஷின் சேவ்சென் ஆகியோரிடம் 21-13, 21-12 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்திய இளம் வீராங்கனை :

மற்றொரு போட்டியில் அக்‌ஷாரி காஷ்யாப் கிம் குவேனிடம் 21-10 மற்றும் 21-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இறுதியாக ஆடிய தானிஷா கிராஸ்டோ, ஜாலி திரிஷா ஜோடி 21-14, 21-11 என்ற கணக்கில் கிம் ஹே ஜியோங், கோங் ஹீயோங்கிடம் தோல்வி அடைந்தது.

இந்திய இளம் வீராங்கனை யுஜின் சிம்மிடம் 21-18, 21-17 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
*

Share this story