இந்தியாவின், 'முதல் கிரிக்கெட் வீரர்' என்ற பெருமையை பெற்றார் விராட்கோலி..
 

virat6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

20 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர், இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 

இதற்கு முன் விளையாட்டு வீரர்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட வீரர்களாக கால்பந்து சூப்பர் ஸ்டார்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். 

ரொனால்டோ 451 மில்லியன் ஃபாலோயர்களையும், மெஸ்ஸி 334 மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் கோலி தற்போது 3-வது வீரராக இணைந்துள்ளார். 

இதனால், விராட்கோலியும் அவரின் மனைவி அனுஷ்காவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் கோலியை ஓய்வு எடுக்கக்கோரி, மூத்த வீரர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இன்று தொடங்கவுள்ள இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
*

Share this story