டெஸ்ட் மேட்சிலிருந்து விராட்கோலியை நீக்கலாம் : கபில்தேவ் காட்டம்..
 

kapil1

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கும் போது, டி20 போட்டியில் இருந்து விராட் கோலியையும் நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து கபில்தேவ் கூறியதாவது :

தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 ஆடும் லெவனில் விளையாடுவதை விட பெஞ்சில்தான் அமர வேண்டும். 

450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கிறார். 

அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும் என்றால் விராட் கோலியையும் டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும். விராட் கோலி பார்மில் இல்லை. 

அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக்கூடாது. நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். 

இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். 

ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும். 

இவ்வாறு கபில்தேவ் காட்டமாக பேசியுள்ளார்.
*

Share this story