அதிக தவறுகளை செய்துவிட்டார் விராட்கோலி : ஷேவாக் அதிரடி பேச்சு

ipl32

சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக சதம் அடிக்காத இந்திய அணி, கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஐ.பி.எல். சீசன் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.

பெரும்பாலான ஆட்டங்களில், தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.

வேறு விராட்கோலி :

இந்நிலையில், விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட, இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். 

இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.

ரன்கள் குவிக்காத போது, இதுபோன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.

இந்த சீசனில், அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகியுள்ளார்' என

இந்நிலையில், தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக, விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.
*

 

Share this story