மன உளைச்சலில் இருந்தார், இப்போது 'அவர்' சரியாகிவிட்டார் : சிஎஸ்கே அணி கோச்சர் தகவல்

cski

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். 

இதுகுறித்து, சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால், மன உளைச்சலில் இருந்தார். 

அதனால், அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்’ என கூறினார்.

இதைத் தொடர்ந்து  நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறுகையில், 'ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக, மன உளைச்சலில் இருந்தார். இப்போது, அவர் சரியாகிவிட்டார். 

அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை' என்றார்.
*

Share this story